புதுவை சட்டமன்ற பொதுக்கணக்கு குழு கூட்டம் முதல் அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுவை சட்டமன்ற பொதுக்கணக்கு குழு கூட்டம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

Update: 2022-02-11 15:02 GMT
புதுச்சேரி
புதுவை சட்டசபையின் பல்வேறு குழுக்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதன்படி பொது கணக்கு குழுவின் தலைவராக கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்கணக்கு குழுவின் முதல் கூட்டம் சட்டசபையின் 4-வது மாடியில் உள்ள கமிட்டி அறையில்  நடந்தது.
கூட்டத்துக்கு குழுவின் தலைவரான கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்து எம்.எல்.ஏ.க்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மூத்த எம்.எல்.ஏ.வான நாஜிம் பொதுக்கணக்கு குழுவின் பணிகள், நடைமுறைகள் குறித்து விளக்கினார்.
கூட்டத்தில் சபாநாயகர் செல்வம் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, ஜான்குமார், பாஸ்கர், செந்தில்குமார், ரிச்சர்ட், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக், அசோக்பாபு, சட்டசபை செயலாளர் முனுசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
------

மேலும் செய்திகள்