ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதிகாலையில் நடைபயிற்சிக்கு சென்றவர் பின்னர், கைகள் கட்டப்பட்ட நிலையில் திருச்சி கல்லணை சாலையோரமாக பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து திருச்சி போலீசாரும், பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் புலன் விசாரணை மேற்கொண்டும், அவர்களால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
முடியவில்லை
இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் சி.பி.ஐ. போலீசார் மேற்கொண்ட விசாரணையிலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து இந்த கொலை வழக்கை தமிழக போலீசாரிடமே மீண்டும் ஒப்படைக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில், கொலை செய்யப்பட்ட ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
முழு ஒத்துழைப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பாரதிதாசன், இந்த கொலை வழக்கை தமிழக போலீசாரிடம் மீண்டும் ஒப்படைக்க மறுத்துவிட்டார். ஆனால், கூட்டு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த அனுமதிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழக தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, இந்த புலன் விசாரணைக்கு தமிழக போலீசார் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று கூறி போலீஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் நீதிபதி வி.பாரதிதாசன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அமைச்சர்
திருச்சியின் இதயப்பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது. அதுவும் மிகப்பெரிய தொழில் அதிபர், அரசியல் கட்சியுடன் நெருக்கமாக இருந்தவர். இவரது சகோதரர் தற்போது அமைச்சராகவும் உள்ளார். அப்படிப்பட்ட நபர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கான காரணத்தையும், குற்றவாளிகளையும் மத்திய, மாநில அரசுகளின் உயர்ந்த புலன் விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த கொலைக்கான காரணத்தை தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆனாலும் முடிந்த அளவு குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளது.
துரதிஷ்டம்
ஆனால், கொலை நடந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அது மிகப்பெரிய துரதிஷ்டவசமானது.
அரசியலமைப்பு சாசனம் விரைவாகவும், நேர்மையாகவும் கோர்ட்டு விசாரணைக்கு மட்டும் வழிவகை செய்யவில்லை. நேர்மையான விரைவான புலன் விசாரணைக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. அப்போதுதான் பொதுமக்கள் மத்தியில் போலீஸ் விசாரணை மற்றும் நீதி பரிபாலனம் மீது நம்பிக்கை ஏற்படுத்த முடியும்.
அதிகாரி ஜெயக்குமார்
எனவே இந்த கொலை வழக்கை விசாரிக்க தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கிறேன். இந்த குழுவில் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதன், ராமஜெயம் கொலை வழக்கை கடந்த 4 ஆண்டுகளாக விசாரித்து வரும் சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.ரவி ஆகியோரையும் நியமிக்கிறேன்.
இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகில் அக்தர் மேற்பார்வையிட வேண்டும்.
கண்காணிப்பு
இந்த விசாரணைக்கு தமிழ்நாடு அரசு எல்லாவிதமான உட்கட்டமைப்பு வசதிகளையும், நிதியையும், வாகன வசதிகள் உள்ளிட்டவைகளையும் வழங்க வேண்டும்.
இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வருகிற 21-ந் தேதி முதல் தொடங்க வேண்டும். விசாரணை விவரங்களை 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கையாக இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த புலன் விசாரணையை இந்த ஐகோர்ட்டு கண்காணிக்கும். விசாரணையை வருகிற மார்ச் 7-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.