ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வாகனம் மோதி போலீஸ்காரர் பலி
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ்காரர் பலியானார்.
பூந்தமல்லி,
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 23). இவர், குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு அவர், மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சிறுகளத்தூர் அருகே ரோந்து சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த நாராயணன், ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ்காரர் சாவு
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரத்த காயங்களுடன் கிடந்த நாராயணனை மீட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்து விட்டு போலீஸ்காரர் நாராயணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.