புதுடெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற காரைக்கால் மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
புதுடெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற காரைக்கால் மாணவனை கலெக்டர் பாராட்டினார்
காரைக்கால்
புதுடெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்து கொண்ட என்.சி.சி., என்.எஸ்.எஸ் மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில், காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதியாண்டு மாணவர் கீர்த்திவாசன் என்ற என்.எஸ்.எஸ் மாணவர் தமிழகம், புதுச்சேரி மாணவர்கள் 100 பேர் பங்கேற்ற அணிவகுப்பை தலைமை ஏற்று நடத்தினார்.
காரைக்கால் திரும்பிய மாணவர் கீர்த்திவாசனை, கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டினர். மேலும் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா மாணவர் கீர்த்திவாசனை நேரில் அழைத்து பாராட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் லட்சுமணபதி, வேளாண் என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷெர்லி ஆகியோர் கலந்துகொண்டனர்
=====