புதுச்சேரியில் இன்று கொரோனாவுக்கு 3 பேர் பலி

புதுவையில் புதிதாக 186 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2022-02-08 15:09 GMT
புதுச்சேரி
புதுவையில் புதிதாக 186 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

 பரிசோதனை 

புதுவையில்  இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 375 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 186 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 85 பேர், வீடுகளில் 3 ஆயிரத்து 343 பேர் என 3 ஆயிரத்து 428 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 444 பேர் குணமடைந்தனர்.

குணமடைவது அதிகம்

அதேநேரத்தில் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதாவது புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காரைக்கால் திருநள்ளாறை சேர்ந்த 54 வயது ஆண், முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரை சேர்ந்த 77 வயது மூதாட்டி, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோணாங்குப்பத்தை சேர்ந்த 52 வயது ஆண் ஆகியோர் பலியானார்கள். இதன்மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,953 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில்     தொற்று பரவல் 7.83 சதவீதமாகவும், குணமடைவது 96.73 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 508 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 2 ஆயிரத்து 684 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 400 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 15 லட்சத்து 47 ஆயிரத்து 183 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
---

மேலும் செய்திகள்