வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்த வக்கீல் கைது

நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை காட்டி பணம் பறித்த வக்கீல் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-08 06:19 GMT
மாமல்லபுரம்,

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம், சதாம் உசேன் நகரை சேர்ந்த பரூக் அப்துல்லா என்பவர் வீட்டில், கடந்த 3ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் இருவர் புகுந்து அவரை கத்தியால் மிரட்டி, 3,500 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். அவர் அளித்த புகாரின் பெயரில் கல்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். தேடலில் வேலூர் மாவட்டம், மேல்மாங்குப்பம் சரவணகுமார் (46) சென்னை கோடம்பாக்கம் சரத்குமார் (28) இருவரும் சேர்ந்து பணம் பறித்தது தெரியவந்தது.

விசாரணையில் சரவணகுமார் 15ஆண்டுகளாக வக்கீலாக இருப்பதும், ஆறு மாதங்களுக்கு முன் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்று மாமல்லபுரம் போலீசாரால் கைதானவர் என்பதும், சரத்குமார் மீது கஞ்சா விற்பனை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளது என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இருவரையும் உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்