கச்சத்தீவு கோவில் திருவிழா: தமிழக மீனவர்கள் பங்கேற்க இலங்கையிடம் அனுமதி பெற வேண்டும்

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா: தமிழக மீனவர்கள் பங்கேற்க இலங்கையிடம் அனுமதி பெற வேண்டும் மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் எம்.பி. கோரிக்கை.

Update: 2022-02-06 19:52 GMT
சென்னை,

கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவில் திருவிழா ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவுக்கு தமிழக மீனவர்கள், இலங்கையினர் கலந்து கொண்டு சிறப்பாக கொண்டாடுவர். இந்த நிலையில் கச்சத்தீவில் இந்தியர்கள் இந்த ஆண்டு திருவிழா கொண்டாட தேவையான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கச்சத்தீவின் அந்தோணியார் கோவில் திருவிழா இந்தியா-இலங்கை மக்கள் இடையே ஒரு நல்லுறவை மேம்படுத்தும் விதமாக இருந்து வருகிறது. இந்த திருவிழாவில் 500 இலங்கையினர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள திருவிழாவில் இந்தியர்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனாவை காரணம் காட்டி இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் பேசி கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க அனுமதி பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்