சிகிச்சை அளிப்பதுபோல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த போலி டாக்டர்
சிகிச்சை அளிப்பதுபோல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
ஆவடி,
ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை எம்.இ.எஸ். ரோட்டில் மருந்து கடை நடத்தி வருபவர் வேணி. இவரது கடைக்கு அருகில் உள்ள அறையில் திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் 13-வது தெருவைச் சேர்ந்த ரீகன் பிரபு (வயது 39) என்பவர் கடந்த மாதம் 31-ந்தேதி புதிதாக கிளீனிக் தொடங்கினார். அவர் தான் எம்.பி.பி.எஸ்., எம்.டி. படித்த டாக்டர் என கூறிக்கொண்டார்.
இவரிடம் முத்தாபுதுப்பேட்டை பெரியார் நகரைச் சேர்ந்த பிரியா (29) என்ற பெண் கடந்த 2-ந்தேதி சிகிச்சை பெற வந்தார். அவரை பரிசோதித்த ரீகன் பிரபு, அவரை அந்த அறையில் படுக்க வைத்து குளுக்கோஸ் ஏற்றினார். சிறிது நேரத்தில் பிரியா அயர்ந்து தூங்கி விட்டதாக தெரிகிறது.
5 பவுன் சங்கிலி பறிப்பு
சிறிது நேரம் கழித்து விழித்து பார்த்த பிரியா, தனது கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த ரீகன் பிரபுவையும் காணவில்லை. இதுபற்றி மருந்து கடையில் உள்ள வேணியிடம் கூறினார்.
அவர், ரீகன் பிரபுவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. அதன்பிறகுதான் பிரியா கழுத்தில் கிடந்த சங்கிலியை ரீகன் பிரபு பறித்துச் சென்றது தெரியவந்தது.
போலி டாக்டர் கைது
இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் முத்தாபுதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜி வழக்குப்பதிவு செய்து ரீகன் பிரபுவை தேடி வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை ரீகன் பிரபுவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர், போலி டாக்டர் என்பது உறுதியானது. 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ரீகன் பிரபு, சென்னை அமைந்தகரை மற்றும் திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில கிளீனிக்குகளில் டாக்டர்களுக்கு உதவியாளராக வேலை செய்து வந்தார்.
அப்போது டாக்டர்கள், அங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விவரங்களையும், மருந்து, மாத்திரைகளையும் தெரிந்துகொண்ட அவர், வேணி மருந்து கடைக்கு அருகே தன்னை டாக்டர் என அறிமுகம் செய்து கொண்டு கிளீனிக் நடத்தியதும், கிளீனிக்கை தொடங்கிய 3-வது நாளிலேயே தன்னிடம் சிகிச்சை பெற வந்த பெண்ணிடம் நகை பறித்து கைதாகி இருப்பது தெரிந்தது. கைதான போலி டாக்டர் ரீகன்பிரபு சிறையில் அடைக்கப்பட்டார்.