“5 வருடங்கள் ஒழுங்காக படித்தால் ராஜா போல வாழலாம்” - மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் அறிவுரை
பேருந்தில் படியில் தொங்கியபடி சென்ற மாணவர்களை உள்ளே செல்லுமாறு இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் அறிவுறுத்தினார்.
சென்னை,
சென்னை பூந்தமல்லி பகுதியில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன், பேருந்தை நிறுத்தி படியில் தொங்கிய மாணவர்களை உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினார்.
மேலும், “பிளஸ் 2 இரண்டு வருடம், கல்லூரி 3 வருடம் என 5 வருடங்கள் ஒழுங்காக படித்தால் ராஜா போல வாழலாம், இல்லாவிட்டால் 50 வருடங்களுக்கு அம்போனுதான் போகனும்” என்று அவர் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
இதைத்தொடர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்களை நிறுத்திய அவர், அவர்கள் அணிந்திருந்த கடுக்கணை கழற்ற வைத்து, தலை முடியை சீராக வெட்டுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.