ஆவடி மாநகாராட்சியில் நரிக்குறவர் பெண் வேட்புமனு தாக்கல்
ஆவடி மாநகராட்சியில் நரிக்குறவர் பெண் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ஆவடி,
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ஆவடி மாநகராட்சியில் தி.மு.க, அ.தி.மு.க, ம.நீ.ம, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 26-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திருமுல்லைவாயல் ஜெயா நகரில் உள்ள நரிக்குறவர் காலனியை சேர்ந்த நரிக்குறவர் பெண் தனலட்சுமி கழுத்தில் மாலை அணிந்து தனது ஆதரவாளர்களுடன் நடனமாடி, பாட்டு பாடி மாநகராட்சிக்கு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது அவருடன் வந்த 50 க்கும் மேற்பட்ட நரிக்குறவர் பெண்கள் கையில் நரிக்குறவர் மக்களுக்கு பட்டா மற்றும் அடையாள அட்டை வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. ஜெய்பீம் படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு நன்றி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வந்தனர்.