கொரோனா விடுமுறைக்குப் பின் பள்ளி கல்லூரிகள் திறப்பு மாணவ மாணவிகள் உற்சாகமாக வந்தனர்
புதுவையில் கொரோனா விடுமுறைக்குப் பின் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவர்கள் உற்சாகமாக வந்தனர்.
புதுச்சேரி
புதுவையில் கொரோனா விடுமுறைக்குப் பின் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவர்கள் உற்சாகமாக வந்தனர்.
பள்ளி, கல்லூரி திறப்பு
புதுவையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த மாதம் 10-ந்தேதி 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலும், 10-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை 18-ந்தேதி முதலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்ததால் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்தது.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.
முழுநேரமும்...
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பள்ளி, கல்லூரி வாசலிலேயே கிருமிநாசினி வழங்கப்பட்டு மாணவர்களின் கைகள் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். மேலும் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்டது. ஒரு சிலரை தவிர பெரும்பாலான மாணவ, மாணவிகள் நேற்று பள்ளி, கல்லூரிக்கு வந்திருந்தனர்.
ஏற்கனவே அறிவித்தபடி இன்று பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் முழு நேரமும் இயங்கின. வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாட்களும் பள்ளிகள் இயங்க உள்ளன.