லஞ்சத்தை தடுக்க அரசு அலுவலகங்களில் கேமரா பொருத்தக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்

லஞ்சத்தை தடுக்க அரசு அலுவலகங்களில் கேமரா பொருத்தக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.

Update: 2022-02-02 18:53 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழ்நாட்டில் லஞ்சம் அதிகரித்து வருகிறது. பிறப்புச்சான்றிதழ் முதல் இறப்புச்சான்றிதழ் வரை அனைத்துக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதுள்ளது. எனவே, அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று விளம்பர பலகை வைக்கவும், லஞ்சம் வாங்குவதை தடுக்கும்விதமாக கண்காணிப்பு கேமரா பொருத்தவும் உத்தரவிட வேண்டும். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் அரசு அதிகாரிகளின் சொத்துகளை முடக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், ‘பொதுப்படையான கோரிக்கைகளுடன், எந்த ஒரு ஆய்வும் நடத்தாமல் விளம்பரத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதித்து, வழக்கை தள்ளுபடி செய்கிறோம். மேலும், மனுதாரர் 2 ஆண்டுகளுக்கு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்ய தடை விதிக்கிறோம். அபராதத் தொகையை 15 நாட்களுக்குள் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்தவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்