பெரம்பலூரில் ரூ.53 லட்சம் பறிமுதல்

பெரம்பலூரில் ரூ.53 லட்சம் பறிமுதல்.

Update: 2022-02-02 18:49 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பேரூராட்சியில் பறக்கும் படையினர் நேற்று மதியம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனத்தை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில், ரூ.53 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் பெரம்பலூரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து குரும்பலூரில் உள்ள அந்த வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் நிரப்ப ரூ.53 லட்சத்தை வாகனத்தில் கொண்டு சென்றது தெரியவந்தது.

ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தையும், வாகனத்தையும் பறிமுதல் செய்து குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மெர்சியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்