சென்னையில் மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை - மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னையில் மழைநீர் தேங்காதபடி அடுத்த மழைக்காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2021-12-31 05:32 GMT
சென்னை,

சென்னை, ஆழ்வார்ப்பேட்டை சீதாம்மாள் காலனியில்  மழை பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.

மழை பாத்திப்புகளை ஆய்வு செய்த பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;-

10 வருடமாக குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள். விமர்சனம் செய்வதற்கு தயாராக இல்லை. இதனை சரி செய்ய வேண்டும். அடுத்த மழை சீசன் வருவதற்குள் இவைகளை சரி செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கு. நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

நேற்று எதிர்பாராத விதமாக கனமழை சென்னையில் பெய்துள்ளது. தேங்கிய மழை நீரை மின் மோட்டம் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்