தொடர்ந்து 55-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
சென்னையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை,
சென்னையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தொடர்ந்து 55-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.
அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.40க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல், புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் தொடர்ந்து சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லாமல் சீராக ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக, கடந்த நவம்பர் 3ம் தேதி தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைக்கும் குறிப்பிடத்தக்க முடிவை மத்திய அரசு எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.