தமிழகத்தில் மேலும் 605- பேருக்கு கொரோனா
கொரோனா பாதிப்பால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 605- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 44 ஆயிரத்து 642- ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 663- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1,00,927- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 172 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.