புதுக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 850 சவரன் நகை கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம் அருகே கோபாலபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜகுபர் சாதிக் என்பவர் வீட்டை உடைத்து 850 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Update: 2021-12-27 10:52 GMT
திருட்டு நடைபெற்ற வீடு
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜகுபர் சாதிக் என்பவர் வீட்டை உடைத்து 850 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலதிபர் ஜகுபர் சாதிக் வெளிநட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. வீட்டின் பூட்டை உடைத்து 850 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்