ஜனவரியில் பூஸ்டர் தடுப்பூசி : தமிழகம் தயாரா... அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

இது குறித்து அமைச்சர் மா .சுப்பிரமணியன் கூறியதாவது ;

Update: 2021-12-25 17:38 GMT
சென்னை,

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று  இரவு 9.45 மணி அளவில்  உரையாற்றினார் .அதில் முக்கிய அம்சமாக கூறியதாவது;

முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி  செலுத்தப்படும்.இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்தார்.

இது குறித்து தந்தி டிவி க்கு பேட்டியளித்த அமைச்சர் மா .சுப்பிரமணியன் கூறியதாவது ;

பூஸ்டர்  டோஸ் தடுப்பூசி மத்திய அரசு ஒப்புதலுக்கு பிறகு நடைமுறைக்கு வரும் ,நடைமுறைக்கு வந்த உடனே தடுப்பூசி போடும் பணிகளை தமிழகம் முன்மாதிரியாக செய்லபடுத்தும் .தமிழகத்தை பொறுத்தவரை 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு போடுகிற தடுப்பூசியாக இருந்தாலும் ,பூஸ்டர் தடுப்பூசியாக இருந்தாலும் மத்திய அரசு அனுமதித்தவுடன் அதனை செயல்படுத்தும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும் என்றார்.

மேலும் செய்திகள்