விபத்தில் சிக்கியவர்களை மீட்ட மாவட்ட கலெக்டர் - பொதுமக்கள் பாராட்டு
தர்மபுரி மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய இருவரை மாவட்ட கலெக்டர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தனது அலுவலக பணியை முடித்துவிட்டு, காரில் திரும்பியுள்ளார். அப்போது அவர் செல்லும் வழியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் விபத்தில் சிக்கி சாலையோரமாக கிடந்துள்ளனர்.
இதனைப் பார்த்து தனது காரை நிறுத்திய கலெக்டர் திவ்யதர்ஷினி, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அவர்களை காரில் ஏற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். கலெக்டரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.