நளினிக்கு ஒரு மாதம் ‘பரோல்' ஐகோர்ட்டில், அரசு தகவல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர் நளினி. இவரை பரோலில் விடக்கோரி அவரது தாய் பத்மா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது என்று கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்காததால், அது நிலுவையில் உள்ளது.
பரிசீலனை
தற்போது என்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், என்னை கவனித்துக்கொள்ள ஏதுவாக என்னுடைய மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கேட்டு கடந்த மே மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தமிழக உள்துறை செயலாளருக்கு மனுக்கள் அனுப்பினேன். அதன் மீது எந்த முடிவும் எடுக்காததால் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் பத்மாவின் மனுக்கள் அரசின் பரிசீலனையில் உள்ளதால், அதுகுறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்று கூறினார்.
ஒரு மாதம்
இதை நீதிபதிகள் ஏற்று கொண்டு விசாரணையை தள்ளிவைத்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ஏற்கனவே நளினி உள்பட 7 பேர் விடுதலை செய்வது தொடர்பான முடிவு பரிசீலனையில் உள்ளது. தற்போது மனுதாரர் பத்மாவின் மனுவை அரசு பரிசீலித்து நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியுள்ளது என்று கூறினார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.