கொரோனா பரவல்: ‘பூஸ்டர் தடுப்பூசிகளை அனுமதிக்கும் நேரம் இது' - ப.சிதம்பரம் கருத்து

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பூஸ்டர் தடுப்பூசிகளை அனுமதிக்கும் நேரம் இது என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-22 22:54 GMT
சென்னை,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

‘பூஸ்டர்' தடுப்பூசிகள் இன்றியமையாதது என்று முடிவு செய்ய போதுமான ஆராய்ச்சி, அறிஞர்களின் ஆதாரங்கள் உள்ளன. லான்செட் நடத்திய ஆய்வில் கோவிஷீல்டு தடுப்பூசியின் வீரியம் 3 மாதத்தில் குறைந்துவிடும் என்பது எச்சரிக்கை மணியை அடிப்பதாக உள்ளது. ‘பூஸ்டர்' தடுப்பூசிகளை அனுமதிக்கும் நேரம் தற்போது வந்துவிட்டது. 

பைசர் மற்றும் மாடர்னா போன்ற அங்கீகரிக்கப்பட்ட பிற தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதிக்கும் தருணம் இது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (பாதுகாப்பு வாதம்) பொருளாதார நலன்களை பாதுகாப்பதற்கான அதன் தவறான ஆர்வத்தில், தடுப்பூசி போடப்பட்ட லட்சக்கணக்கான இந்தியர்களை அரசு தொற்றுநோய்க்கு ஆளாக்குகிறது. கொரோனாவின் 3-வது அலை அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசி போடப்பட்ட இந்தியர்களை தாக்கினால், அதற்கு அரசு மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்