மதுரை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இரவு நேர ரோந்து பணியின் போது பழமையான கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
மதுரை கீழவெளி பகுதியில் உள்ள பழமையான கட்டிடத்தின் முதல் மாடி சுவர் இடிந்து விழுந்து காவலர் சரவணன் என்பவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு காவலர் கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விளக்குத்தூண் காவல்நிலைய காவலர்கள் இருவரும் இரவு ரோந்து பணியில் இருந்த போது பழைமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில்,இரவு நேர ரோந்து பணியின்போது பழமையான கட்டிடத்தின் முதல் மாடி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த காவலர் சரவணன் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,காவலர் சரவணன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.