நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு?

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2021-12-22 03:28 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை இன்றுடன் நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இரு அவைகளையும் முடக்கி வருவதால் நாளைக்கு பதில் இன்னுடன் நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

நவம்பர் 29-ல் துவங்கிய கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் முடிந்ததால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்