மக்கள் ஊழியனாக உறுதியளித்தேன் - மு.க.ஸ்டாலின் டுவீட்

தமிழக அரசின் நிதிநிலை சரியானவுடன் அவர்கள் கேட்காமலே நிறைவேற்றப்படும் என மக்கள் ஊழியனாக அரசு ஊழியர்களுக்கு உறுதியளித்தேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2021-12-19 16:13 GMT
சென்னை,

மாதவரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி எப்போதும் அரசு ஊழியர்களின் பொற்கால ஆட்சி என்றார். மேலும் அரசு ஊழியர்கள் இன்றி அரசாங்கமே இல்லை எனவும் அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம் என்றும் தெரிவித்தார்.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில், 

அரசு இயந்திரம் தொய்வின்றிச் செயல்பட இதயமென உழைக்கும் அரசு ஊழியர் சங்க மாநாட்டில் கலந்துகொண்டேன். அவர்களது நியாயமான கோரிக்கைகள் தமிழக அரசின் நிதிநிலை சரியானவுடன் அவர்கள் கேட்காமலே நிறைவேற்றப்படும் என மக்கள் ஊழியனாக அரசு ஊழியர்களுக்கு உறுதியளித்தேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்