ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 59 பேர் கண்டுபிடிப்பு
ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவருடன் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 59 பேரை மாநகராட்சி அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சென்னை,
நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக கடந்த 10-ந் தேதி சென்னை வந்த 47 வயது நபர் சென்னை சாலிகிராமத்தில் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். 14-ந்தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, உடனடியாக அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குடும்பத்தினரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்தனர்.
அதில் 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அவருக்கு ஏற்பட்டது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பா என்பதை உறுதி செய்ய பெங்களூருவில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில் நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கு நேற்று முன்தினம் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று காங்கோவில் இருந்து வந்த பெண் உள்பட தற்போது வரை 8 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தி கண்காணிப்பு
இந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் நடந்த இறுதி சடங்கில் ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபருடன் பங்கேற்றவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் என தற்போது வரை 59 பேரை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்ட நபரின் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற நபர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டால் ஆஸ்பத்திரியிலும், தொற்று இல்லை என்றால் ஒரு வாரத்துக்கு தனிமைப்படுத்தியும் கண்காணிக்கப்படுவார்கள்,’ என்றனர்.