பயிர்க்கடன் ரத்து அறிவிக்க தமிழக பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தல்

பயிர்க்கடன் ரத்து பற்றிய அறிவிப்பினை அறிவிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-12-16 16:19 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, விவசாய முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் செல்ல. ராசாமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற கூட்ட தொடரில் விவசாயிகளுக்கான பயிர் கடன் ரத்து உள்ளிட்ட அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்காவிட்டால் கோட்டையை  நோக்கி முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

அ.தி.மு.க. - பா.ஜ.க. இரண்டும் ஒரே படகில் பயணிக்கிறது.  வலிமையான கூட்டணி என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்