காரைக்காலில் வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகை கொள்ளை
காரைக்காலில் வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றனர்.
காரைக்கால்
காரைக்காலில் வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றனர்.
நகை, பணம் கொள்ளை
காரைக்கால் தோமஸ் அருள் வீதியை சேர்ந்தவர் சந்திரா (வயது 64). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் திருபட்டினத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து இன்று காலை தனது வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது, ஒருஅறையில் வைத்திருந்த 2 பீரோக்களில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ லாக்கரில் வைத்திருந்த 14 பவுன் தங்க நகைகள் மற்றும் 9 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போயிருந்தது.
போலீசார் விசாரணை
சந்திராவின் வீடு பல நாட்கள் பூட்டிக்கிடந்ததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் கதவை உடைத்து துணிகரமாக கைவரிசை காட்டியுள்ளனர். தகவல் அறிந்த காரைக்கால் நகர போலீசார், கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரித்தனர்.
இந்த கொள்ளை குறித்து காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.