"நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு - அதிகாரிகளுக்கு எச்சரிக்கை"

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-12-16 10:17 GMT
சென்னை,

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை தடுக்க தவறினால் அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வே எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெரியும் என்பதால் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் நீர் நிலைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமை எனவும், 

ஆக்கிரமிப்பு மீண்டும் இருந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், தலைமை செயலாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்தனர். தமிழகம் முழுவதும் நீநிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்குகளில் தீர்ப்பை ஐகோர்ட்டு  ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்