நக்கீரர் பாடல்களை கட்டாய பாடமாக்க வேண்டும் - தமிழக அரசுக்கு மதுரை ஆதீனம் வேண்டுகோள்

நக்கீரர் பாடல்களை மாணவர்களுக்கு கட்டாய பாடமாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-12-12 13:26 GMT
மதுரை,

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் நக்கீரர் தமிழ்ச் சங்க மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மதுரை 293-வது ஆதீனம் குருமகா சன்னிதானம், தமிழகத்தில் ஆங்கிலவழி பள்ளிகள் தான் அதிகமாக உள்ளது என்று கூறினார்.

குழந்தைகள் அழகான தமிழ் மொழியில் பேச வேண்டும் என்று கூறிய அவர், மாணவர்களுக்கு நக்கீரர் பாடல்களை தமிழக அரசு கட்டாய பாடமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  

மேலும் செய்திகள்