திருமயம் அருகே அரசு பேருந்து தீ பிடித்து எரிந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு..!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அரசு பேருந்து தீ பிடித்து எரிந்த விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பம்பாற்று பாலம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் தீ பற்றியதாக கூறப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் அதில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பேருந்து தீ பிடித்ததும், அதில் பயணம் செய்த பயணிகள் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் விரைவாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் திருச்சி- ராமேஷ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.