ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் பணம் கேட்டு மிரட்டல் பெங்களூரு பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு

மகன் ஏமாற்றியதாக கூறி ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் பணம் கேட்டு மிரட்டிய பெங்களூரு பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-12-06 16:13 GMT
புதுச்சேரி
மகன் ஏமாற்றியதாக கூறி ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் பணம் கேட்டு மிரட்டிய பெங்களூரு பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஓய்வுபெற்ற ஆசிரியை

புதுச்சேரி முதலியார்பேட்டை தில்லைநகர் பிள்ளையார்கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி சுலோச்சனா (வயது 80). ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் பிரதீப் பெங்களூருவில் தங்கி வேலைபார்த்து வருவதாக கூறப்படுகிறது. ராஜாமணி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
சம்பவத்தன்று சுலோச்சனா தனது மகனுடன் வீட்டில் இருந்தார். அப்போது பெங்களூருவை சேர்ந்த தமயந்தி சவுமியா என்ற பெண் அவரது வீட்டிற்கு வந்தார். அவர், சுலோச்சனாவிடம் ‘உங்கள் மகன் ஏன் பெங்களுருவுக்கு வரவில்லை. அங்கு அவர் என்னிடம் நன்றாக பழகி என்னை ஏமாற்றி விட்டார். உங்கள் வீட்டை விற்று எனக்கு பணம் கொடுங்கள். இல்லை என்றால் அவர் பெங்களூருவில் இருந்தபோது எனக்கு மாதந்தோறும் பணம் தந்தது போல தற்போதும் பணம் தர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
தற்கொலை மிரட்டல்
மேலும் நான் புதுவைக்கு வரும்போதெல்லாம் பணம் தரவேண்டும். இல்லையென்றால் விஷம் குடித்துவிட்டு, என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விடுவேன் என்று மிரட்டினார். தொடர்ந்து சுனோச்சனாவிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை கூகுள்பே மூலமாக அவர் பறித்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் பெங்களூரு சென்ற தமயந்தி சவுமியா அங்கிருந்து செல்போன் மூலம் சுலோச்சனாவை தொடர்பு கொண்டு மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்