ஜெய்ப்பூர் நகை நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை: கணக்கில் வராத ரூ.500 கோடி கண்டுபிடிப்பு

ஜெய்ப்பூர் நகை நிறுவனத்தில் சுமார் 50 இடங்களில் வருமானவரித் துறையினர் கடந்த மாதம் 23-ந் தேதி சோதனை நடத்தினர்.

Update: 2021-12-01 20:22 GMT
புதுடெல்லி, 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனம், நகை தயாரிப்பு, ரத்தினக்கற்கள் மெருகேற்றுவது, அவற்றை ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சுமார் 50 இடங்களில் வருமானவரித் துறையினர் கடந்த மாதம் 23-ந் தேதி சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் காட்டப்படாத சுமார் ரூ.500 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும், ரூ.4 கோடி ரொக்கம், ரூ.9 கோடி மதிப்புள்ள நகைகளும், வரி ஏய்ப்புக்கு ஆதாரமான பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. குறிப்பிட்ட நிறுவனம், பல்வேறு விதங்களில் வரி ஏய்ப்பு மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளது. தற்போதுவரை, ரூ.72 கோடியை கணக்கில் காட்டாததை அந்நிறுவனத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர். 

மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்