தமிழகத்தில் 21 உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் 21 உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
சென்னை,
21 உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் மாற்றம் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கே.கோபால் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இன்ட்கோசர்வ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுப்ரியாசாகு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் பி.ஜோதி நிர்மலாசாமி வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை செயலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் காகர்லா உஷா பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார்.
வீட்டு வசதித்துறை
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்சேனா பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையர் குமார் ஜெயந்த் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் ஆனார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர் ஹித்தேஸ்குமார் மேக்வானா வீட்டு வசதிகள் மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் டி.கார்த்தி கேயன் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
விவசாயிகள் நலத்துறை
போக்குவரத்து துறை செயலாளர் சி.சமயமூர்த்தி வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன் சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ஆர்.கிரிலோஷ்குமார் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையில் செயலாளராக மாற்றப்பட்டார்.
ஜவுளி, கதர்துறை
தொழில்துறை சிறப்பு செயலாளர் வி.அருண்ராய் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறையின் செயலாளராக மாற்றப்பட்டார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஆனார்.
உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, கைவினைகள், கைத்திறன் ஜவுளி மற்றும் கதர்துறை முதன்மை செயலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் கே.மணிவாசன் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
கோ-ஆப்டெக்ஸ்
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். அயல்நாட்டு மனிதவள கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் தர்மேந்திரபிரதாப் யாதவ் எரிசக்திதுறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார்.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மைதிலி கே.ராஜேந்திரன் பணியாளர்கள் மற்றும்நிர்வாக சீர்திருத்த துறை செயலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். கைவினைகள், கைத்திறன், ஜவுளி மற்றும் கதர்துறை முதன்மை செயலாளர் சம்பு கலோலிகர் சமூகநலன் மற்றும் சத்துணவு தி்ட்டத்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். சமூக பாதுகாப்பு ஆணையர் ஆர்.லால்வேனா மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.