அம்பேத்கருக்கு எதிராக பாஜக ஒருபோதும் செயல்பட்டதில்லை: அண்ணாமலை

அம்பேத்கருக்கு எதிராக பாஜக ஒருபோதும் செயல்பட்டதில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

Update: 2024-12-18 14:49 GMT

கோவை,

கோவை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அம்பேத்கருக்கு காங்கிரஸ் செய்துள்ள அவமானங்களை அமித்ஷா பட்டியலிட்டுள்ளார். அம்பேத்கர் வாழ்ந்த இடங்கள் அனைத்தையும் வாங்கி, பாஜக மக்கள் வரும் இடமாக மாற்றியுள்ளது. காங்கிரஸ் அம்பேத்கருக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. ஏன் காங்கிரஸ் அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியில் நேரு, அம்பேத்கருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். அம்பேத்கருக்கு போடுகிற ஓட்டு குப்பையில் போடுகிற ஓட்டு என்றார். பாஜக இத்தனை ஆண்டுகளில் ஒரு போதும் அம்பேத்கருக்கு எதிராக செயல்பட்டதில்லை.

அம்பேத்கர் எனக்கு கடவுள். அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன். உதயநிதி ஹிந்தி தெரியாது போடா என்று சொன்னவர். அமித்ஷா பேசியது என்ன புரிந்தது. 35 திமுக அமைச்சர் பட்டியலில் ஏன் பட்டியலின சகோதர, சகோதரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை?. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்