போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி நடத்தும் கல்லூரி மாணவிகளுக்கான போத்தீஸ் சேலை தின சிறப்பு போட்டிகள்

கல்லூரி மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் விதத்திலும் சேலையின் மேன்மையை வெளிப்படுத்தும் விதத்திலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

Update: 2024-12-18 13:46 GMT

நம் பண்பாட்டின் அடையாளமாகவும், பெண்களின் வாழ்வின் அங்கமாகவும் விளங்குவது சேலை. ஆடை வகை என்பதையும் தாண்டி நேர்த்தியான உழைப்புக்கும், கலை நயத்திற்கும் எடுத்துக்காட்டாக இருப்பது சேலை. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த உடையாகிய சேலையை கௌரவிக்கும் விதமாக போத்தீஸ் சேலை தினம் வரும் 20-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆடை ரகங்களின் தன்னிகரற்ற அடையாளமான போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி இணைந்து கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு கொண்டாடும் விதத்தில் சிறப்பு போட்டியை முதற்கட்டமாக 20 கல்லூரிகளில் நடத்தியுள்ளனர்.

கல்லூரி மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் விதத்திலும் சேலையின் மேன்மையை வெளிப்படுத்தும் விதத்திலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சேலை அணிதல் மூலம் வெவ்வேறு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் சாரி டிராப்பிங், சேலை வாங்கும் போது பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது அழகிற்கா? ஆடம்பரத்திற்கா? என்கிற தலைப்பில் விவாத போட்டி மற்றும் சேலை அணிந்துகொண்டு அசத்தலாக தங்கள் திறமையை வெளிப்படுத்தும் நடனப் போட்டி என கலகலப்பான இந்த முதற்கட்ட போட்டிகளை,

ஏ.எம்.ஜெயின் கல்லூரி

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி

டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி

முகமத் சாதக் ஏ.ஜே. பொறியியல் கல்லூரி

ஐ.எஸ்.எஸ்.எம். பிஸ்னஸ் ஸ்கூல்

எஸ்.டி.என்.பி. வைஷ்ணவ் மகளிர் கல்லூரி

நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

எம்.ஓ.பி. வைஷ்ணவ் மகளிர் கல்லூரி

சவீதா மேலாண்மை பள்ளி

ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ஜஸ்டிஸ் பஷீர் அகமது சயீத் மகளிர் கல்லூரி

முகமது சதக் ஏஜெ மருந்தியல் கல்லூரி

எஸ்.ஆர்.எம். குழும கல்வி நிறுவனங்கள்

டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரி

ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

சென்னைக் கிறித்தவக் கல்லூரி உள்ளிட்ட 20 கல்லூரிகளில் நடத்தியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கான வென்யு பார்ட்னராக உள்ள சென்னை மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் பிரமாண்ட இறுதிப் போட்டி வரும் டிசம்பர் 20ம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதற்கட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகள் கலந்துகொள்வார்கள். இதில் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த இறுதி போட்டியில் சேலை அணிந்து கொண்டு மாணவிகள் கலந்துகொள்ளும் வாக்கத்தான் உள்ளிட்ட ஏராளமான போட்டிகளும், நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

கல்லூரி மாணவிகள் மட்டும் பங்குபெறும் இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியை, ஆடை ரகங்களின் தன்னிகரற்ற அடையாளமான போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி இணைந்து நடத்துகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கான வென்யூ பார்ட்னராக தங்களின் சிறப்பான பங்களிப்பை ஏ.எம்.ஜெயின் கல்லூரி வழங்குகிறர்கள். மேலும், நிகழ்ச்சிக்கான அனைத்து பணிகளையும் சிறப்பாக முன்னெடுத்துள்ளார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான ராஸ்மட்டாஸ் நிறுவனர் திரு ஜோ மைக்கேல் பிரவீன்.

நம் பண்பாட்டின் மேன்மையை வெளிப்படுத்தும் சேலையைக் கொண்டாடும் விதமாக போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறும் மாணவிகளுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் வழங்கப்படும்.


Full View

Tags:    

மேலும் செய்திகள்