சேலத்தில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

சேலம் தலைவாசல் அருகே இலத்துவாடியில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.

Update: 2020-12-17 05:11 GMT
சேலம்,

ஏழை எளிய மக்களை தேடி சென்று மருத்துவ சேவை அளிக்கும் வகையில், 'மினி கிளினிக்' கொண்டுவரப்படும் என முதலமைச்சர் பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் மொத்தம் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டன. இதற்கு 'முதலமைச்சரின் அம்மா கிளினிக் திட்டம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலத்துவாடி கிராமத்தில், அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

அதனை தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது:-

இந்தியாவில் கொரோனா இறப்பு விகித‌த்தை குறைத்த மாநிலம் தமிழகம். கேரளா, டெல்லி மாநிலங்களை மேற்கோள் காட்டியவர்கள் இப்போது எங்கே போனார்கள்?  தமிழக அரசு மீது திட்டமிட்டே எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன என்றார்.

மேலும் செய்திகள்