கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் - மும்பை இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் - மும்பை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் - மும்பை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில்-மும்பை இடையே வாரம் இருமுறை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து வருகிற 13, 17, 20, 24, 27, 31 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண். 06352) மறுநாள் இரவு 7.15 மணிக்கு மும்பை சென்றடையும்.
மறுமார்க்கமாக 14, 18, 21, 25, 28 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து இரவு 8.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண். 06351) 3-வது நாளில் காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். இந்த சிறப்பு ரெயில்கள் 5 குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 சாதாரண வகுப்பு பெட்டிகளுடன் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.