ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஆலோசனை

ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Update: 2020-12-10 06:24 GMT
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்பட்டார். அதேபோல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் ரஜினி தற்போது துரிதப்படுத்தியுள்ளார். 

இந்த நிலையில் நேற்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி ஆகியோருடன் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய கட்சியை எங்கு தொடங்குவது, மாநாட்டை எங்கு அமைப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. மேலும், போஸ்டரில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன், சுதாகர் புகைப்படம் இடம்பெறக்கூடாது எனவும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை மறுநாள் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வருவதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்