சென்னை-மன்னார்குடி ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை-மன்னார்குடி ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2020-12-07 19:21 GMT
சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை-மன்னார்குடி சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06179), இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சென்னையில் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.45 மணிக்கு மன்னார்குடி சென்றடையும்.

ரெயில்களின் நேரங்களில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், பயணிகள் அனைவரும் ரெயில்வே இணையதளம் மற்றும் செயலிகள் மூலம் உரிய நேரம் குறித்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்