ரஜினி கட்சிக்காக காத்திருக்கிறோம் - எல்.முருகன்

ரஜினி கட்சிக்காக காத்திருக்கிறோம் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

Update: 2020-12-06 08:20 GMT
தூத்துக்குடி,

முருகனின் 6 படை வீடுகளுக்கும் செல்ல வேண்டும் என்கிற பாஜக மாநில தலைவர் எல்.முருகனின் திட்டத்தின்படி 2 படை வீடுகளுக்கு சென்றிருந்த நிலையில், புயலின் காரணமாக யாத்திரை தடைபட்டிருந்தது.

இந்நிலையில் புயல்,மழையினால் வேல் யாத்திரை ரத்து செய்யப்பட்டு, மீதமுள்ள படை வீடுகளில் வழிபாடு நடத்தப்படுகிறது. நாளை 7.12.2020 அன்று திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு பெறுகிறது.

வெற்றிவேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி நாளை திருச்செந்தூரில் நடைபெறவுள்ளதை அடுத்து பாஜக தமிழ் மாநில தலைவர் எல்.முருகன் இன்று காலை திருச்செந்தூர் கடலில் நீராடி கோபுர தரிசனம் செய்தார்.

அதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் மேலூரில் வேல்யாத்திரை தொடங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிறைவு விழாவில் மத்தியபிரதேச முதல்வ-மந்திரி பங்கேற்க இருப்பதாக கூறினார். மேலும் ரஜினி கட்சி தொடங்குவதற்காக காத்திருக்கிறோம் என்றார்.

இதனிடையே மதுரையில் தடையை மீறி வேல்யாத்திரை நடத்திய பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல்நிலையத்தில் 3 பிரிவிகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம் ஆகிய கோவில்களில் அவர் சாமிதரிசனம் செய்தார். பாஜ.க மூத்த தலைவர் ஹச்.ராஜா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். 

நாளை நடைபெறும் நிறைவு நாள் கூட்டத்தில் ம.பி. முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்பார் என்று பாஜக முருகன் அறிவித்திருக்கும் நிலையில், திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு கூட்டம் நடத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்