புரெவி புயல் எதிரொலி: முத்துநகர், மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதியாக ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

புரெவி புயல் எதிரொலியாக முத்துநகர், மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2020-12-03 18:51 GMT
சென்னை, 

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

புரெவி புயல் எதிரொலியால் கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* தூத்துக்குடி-சென்னை எழும்பூர் (வண்டி எண்: 02694) இடையே இயக்கப்படும் முத்துநகர் சிறப்பு ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை), தூத்துக்குடி-மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும்.

* தூத்துக்குடி-மைசூரு (06235) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் இன்று, தூத்துக்குடி-மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, மதுரையில் இருந்து மைசூருக்கு இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்