காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 67 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது - பொதுப்பணித்துறை தகவல்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 67 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-11-17 04:28 GMT
சென்னை,

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பல ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 67 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல்  தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 909 ஏரிகளில் காஞ்சிபுரத்தில் 13 ஏரியும், செங்கல்பட்டில் 54 ஏரியும் நிரம்பியுள்ளன. 125 ஏரிகள் 75%, 206 ஏரிகள் 50%, 125 ஏரிகள் 25%, 324 ஏரிகள் 25% குறைவாகவும் நிரம்பியுள்ளன.

மேலும் செய்திகள்