வரும் 23ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
வரும் 23ம் தேதி கூடுகிறது திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை,
வரும் 23ம் தேதி கூடுகிறது திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 23-11-2020 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும். அப்போது உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.