தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து; இன்று மாலை மக்களுக்கு உரையாற்றுகிறார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று மாலை 4.30 மணிக்கு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

Update: 2020-11-13 05:54 GMT
சென்னை,

தீபாவளி பண்டிகை நவம்பர் 14ஆம் தேதி(நாளை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பல்வேறு தலைவர்கள் மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது வாழ்த்துக்களை தமிழக மக்களுக்கு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக மக்கள் அனைவருக்கு தனது உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். தமிழக மக்களின் வாழ்வில் துன்பம் நீங்கி, இன்பங்கள் பெருகி, நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 4.30 மணிக்கு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்