டிசம்பர் 6-ல் திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை ஒப்படைக்கும் வரை ஓயப்போவதில்லை - எல்.முருகன்

டிசம்பர் 6-ல் திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை ஒப்படைக்கும் வரை ஓயப்போவதில்லை என்று பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-10 14:55 GMT
கிருஷ்ணகிரி, 

ஒசூரில் நடைபெற்ற வேல்யாத்திரையின் போது பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் எல்.முருகன், “டிசம்பர் 6-ல் திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை ஒப்படைக்கும் வரை ஓயப்போவதில்லை” என்று தெரிவித்தார்.  

மேலும் கந்தசஷ்டி கவசம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தியவர்களுக்கு எதிராகத்தான் வேல் யாத்திரை நடைபெறுகிறது என்றும், பிரச்சினைகளை தாண்டி பீனிக்ஸ் பறவையாக திருச்செந்தூர் சென்றடைவோம் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து தடையை மீறி வேல் யாத்திரையில் ஈடுபட்டதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

மேலும் செய்திகள்