அமெரிக்க தேசிய கொரோனா தடுப்பு குழுவில் தமிழ் பூர்வீகத்தை கொண்ட செலின் நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி - மு.க.ஸ்டாலின்

அமெரிக்க தேசிய கொரோனா தடுப்பு குழுவில் தமிழ் பூர்வீகத்தை கொண்ட செலின் நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-10 12:16 GMT
சென்னை, 

46-வது அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன், கொரோனா தடுப்பு பணிக்காக அமைத்துள்ள தேசிய பெருந்தொற்றுத் தடுப்பு குழுவில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் செலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் செலின், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும், அமெரிக்காவின் காசநோய் தடுப்புப் பிரிவில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க தேசிய கொரோனா தடுப்பு குழுவில் தமிழ் பூர்வீகத்தை கொண்ட செலின் நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன், கொரோனா தடுப்புக்கு அமைத்துள்ள தேசியப் பெருந்தொற்றுத் தடுப்பு குழுவில் செலின் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்ப் பூர்வீகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இத்தகைய முக்கியப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன். அவரது பணி சிறக்க வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்