அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

Update: 2020-11-09 03:03 GMT
சென்னை, 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு இ-பாக்ஸ் நிறுவனம் மூலம் மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டன. நடப்பாண்டும் அதே நிறுவனம் தான் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை அளிக்க இருக்கிறது.

இந்த பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, 14 ஆயிரத்து 975 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர். அவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் கடந்த 1-ந்தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாணவர்கள் அதிகம் பேர் விண்ணப்பித்த காரணத்தினால் அது தள்ளிவைக்கப்பட்டது.

இந்தநிலையில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் செய்திகள்