சென்னை மாநகராட்சியில் நடமாடும் அம்மா உணவகங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சியில் நடமாடும் அம்மா உணவகங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2020-11-04 06:18 GMT
சென்னை, 

சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்களின் சேவையை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

மேலும் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னைக்காக 3 நடமாடும் அம்மா உணவகங்கள் துவங்கப்பட்டுள்ளன என்றும், நாளடைவில் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் நடமாடும் அம்மா உணவகங்களை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்