மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு முதலமைச்சர் பழனிசாமி அஞ்சலி

அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.

Update: 2020-11-01 02:07 GMT
சென்னை, 

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். 

தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்தின் முன் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் பழனிசாமியுடன் ஜி.கே. வாசன், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், உதயகுமார், செல்லூர் ராஜூ, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளும் அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.  

மரியாதை செலுத்துவதற்கு முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் துரைக்கண்ணுவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனைத்தொடர்ந்து துரைக்கண்ணுவின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரி வன்னியடி கிராமத்திற்கு அவரது உடல் எடுத்து சென்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

மேலும் செய்திகள்