வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி - உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்

செம்பரம்பாக்கம் ஏரி தற்போது வேகமாக நிரம்பி வரும் நிலையில் உபரிநீரை திறக்க அதிக வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-10-29 12:16 GMT
சென்னை,

கிருஷ்ணா நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதற்கிடையில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தற்போது ஏரியில் நீர்மட்டம் 5 கண் மதகுகளை தொட்ட நிலையில் உள்ளது. பருவமழை அதிகரித்தால் 15 நாட்களுக்குள் ஏரி முழு கொள்ளளவை எட்டிவிடும் என்பதால், உபரிநீரை திறக்க அதிக வாய்ப்புள்ளது. இதற்காக அனைத்து மதகுகளும் பராமரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்